10ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் பாலசுப்பிரமணியம் பரமேஸ்வரி
இறப்பு
- 15 JAN 2015
Tribute
1
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
கேகாலையைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, வத்தளை ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த பாலசுப்பிரமணியம் பரமேஸ்வரி அவர்களின் 10ம் ஆண்டு நினைவஞ்சலி.
அன்பால் எமை ஆண்ட அன்னையே
அன்றொரு நாள் ஒரு வார்த்தை சொல்லாமல்
எமை விட்டுப் பிரிந்து போய்
இன்றோடு பத்தாண்டு ஆனதா.?
இன்னும் ஆறவில்லை எம் துயரம் தாயே
மாதங்கள் பல சென்றாலும்
வலிகள் நகரவில்லை
வாழ்க்கையின் ஒவ்வொரு தருணத்திலும்
உங்களை நாங்கள் மறக்கவில்லை தாயே!
இருந்தபோதே எம்மைக்காத்த
காவல் தெய்வமே - இறந்தாலும்
எம்மை இறையாக்காப்பீரே!
ஆண்டுகள் எத்தனை கடந்தாலும்
எங்கள் ஆழ்மனங்களின் ஆணிவேர் நீங்கள்
எங்களுக்கான இலக்கணம் படைத்த
உங்களை பத்து அல்ல பல நூறு ஆண்டுகள்
சென்றாலும் மறக்கமாட்டோம்
உங்கள் ஆத்மா சாந்தியடைய என்றும்
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்..!
தகவல்:
உங்கள் பிரிவால் வாடும் பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள்,