யாழ். வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகவும், கொழும்பு கிராண்ட் பாஸ் மாவத்தையை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த பாலசுப்பிரமணியம் பால்ராஜ் அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், அந்தியேட்டி அழைப்பிதழும்.
எங்களின் இமயக்கொடி வீழ்ந்தபோது செய்வதறியாத துயரில் நாமிருக்கும் நேரம் செய்திகேட்டு நம் வீட்டுத் துயர் போல உடன் ஓடிவந்து ஆறுதல் சொன்ன அனைத்து உள்ளங்களுக்கும், உலகின் எல்லா திக்குகளிலும் இருந்து தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு துயர் பகிர்ந்த உறவுகள் அனைவருக்கும் இருகரம் கூப்பி தலை தாழ்த்தி நன்றிகளை தெரிவிப்பதோடு வாழ்நாள் முழுவதும் நினைவு கூறுகிறோம்.
அன்பானவரின் அந்தியேட்டி நினைவு நாள் 29-11-2018 வியாழக்கிமை அன்று 78/3 மாவத்தைறோட், கிராண்ட் பாஸ் கொழும்பு-14 எனும் முகவரியில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் நண்பகல் 11:00 மணிமுதல் 12:00 மணியளவிலும் பிரான்ஸில் அவரது தாயாரது இல்லத்தில் 11:00 மணிமுதல் 12:00 மணிவரை புண்ணியாதானமும் நடைபெறும். இலங்கையிலும், பிரான்ஸிலும் நடைபெற உள்ள மதிய உணவு உபசாரத்தில் கலந்துகொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம். இந் நிகழ்வில் அனைவரும் கலந்து கொண்டு எம் இனிய அன்பானவரின் “புண்ணிய ஆத்மா” சாந்தி பெற வல்வை சாமூண்டீஸ்வரி முத்துமாரி அம்மனை வேண்டிட அன்புடன் அழைக்கின்றோம்.
நன்றி!! ஓம் சாந்தி!!
எனது ஆழ்ந்த அனுதாபங்கள். பிரிவின் துயரில் ஆழ்ந்து கிடக்கும் குடும்பத்தார்க்கும் உறவுகளுக்கும்.