

யாழ். கல்வியங்காடைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் St. Gallen ஐ வதிவிடமாகவும் கொண்ட பாலசுப்பிரமணியம் நக்கீரன் அவர்களின் கண்ணீர் அஞ்சலி.
உன் பிரிவின் துயரத்தில்
உன் உருவம் காண்பதற்காக
காலன் அவன் ஆசை கொண்டானோ
உன் பாசம் தனில் காத்து சென்றானோ
காத்திருக்கின்றோம் மீண்டும் நீ வருவாயென...
நீக்கம் மறந்து நிறைந்திருக்கும்
உங்கள் நினைவுகளோடும்
எம்மை தவிக்கவிட்டு சென்றாயே
உறவுகள் புலம்புகின்றனர்
உலகமே இருண்டு போனது
உணர்வே மருண்டு போனது
உன் முகம் காணவில்லையே
என் நண்பனே எங்குதான் போனாயோ
பிரிவுகளால் வலிகள் தந்தவனே
வசந்தத்தை தொலைத்து தூரமானாயோ
உன் புன்னகை காணாது தவிக்கின்றோம்
உன் மொழி கேளாது அழுகின்றோம்
காலங்கள் தேய்ந்திடினும்
உன் நினைவுகள் அழிந்திடுமோ
ஆத்மா சாந்தியடைய பிராத்திக்கின்றோம்
ஓம் சாந்தி...! ஓம் சாந்தி...! ஓம் சாந்தி...!
செங்குத்தா இந்துக் கல்லூரி மாணவர்கள், நண்பர்கள் ...
கனடா நண்பர்கள்: கதிர், சுதா, வசந்தா, கலை, நாதன், பாஸ்கரன், குணம்