யாழ். கொக்குவில் கிழக்கு உடையார் வீதியைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணம் பிறவுன் ரேட் முதலாம் ஒழுங்கையை வசிப்பிடமாகவும் கொண்ட பாலசுப்பிரமணியம் மணிமேகலாதேவி அவர்கள் 02-07-2020 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற மாணிக்கம், நாகம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற சுந்தரம்பிள்ளை நாகம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற பாலசுப்பிரமணியம்(பிரபல வர்த்தகர்) அவர்களின் அன்பு மனைவியும்,
அரவிந்தன்(ஐக்கிய அமெரிக்கா, கனடா) அவர்களின் பாசமிகு தாயாரும்,
மேகலா(கனடா) அவர்களின் பாசமிகு மாமியாரும்,
Dr. P.M நடராஜா(பிரித்தானியா) அவர்களின் பாசமிகு சகோதரியும்,
காலஞ்சென்ற செல்வரட்ணம்(புங்குடுதீவு அதிபர்) மற்றும் அன்னபூரணி(சுவிஸ்) ஆகியோரின் அன்புச் சம்பந்தியும்,
காலஞ்சென்றவர்களான இரத்தினம்மா, சத்திலக்சுமி ஐயாத்துரை, இராஜலெக்சுமி பத்மநாதன், மற்றும் விஜயலக்சுமி திருவண்ணாமலை ராஜா(இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
ஜெகதாம்பாள்(இலங்கை), காலஞ்சென்ற தங்கேஸ்வரன், தயாநிதி(இலங்கை), காலஞ்சென்ற வசந்தன், வனஜா(இலங்கை), வரதன்(பிரித்தானியா), வதனா(பிரித்தானியா), ஜோய்(பிரித்தானியா), ஜீவா(சுவிஸ்), நிருபா(இலங்கை), பிரேமரஞ்சினி(பிரித்தானியா), சத்திரூபன்(கனடா), காந்தரூபன்(டென்மார்க்), மதனரூபன்(பிரித்தானியா), ரஜனி(பிரித்தானியா)) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
வினுஜன்(கனடா), நிரோஜன்(கனடா) ஆகியோரின் பாசமிகு அப்பம்மாவும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 03-07-2020 வெள்ளிக்கிழமை அன்று மு.ப 11:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பி.ப 01:00 மணியளவில் கோம்பயன் மணல் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.