யாழ். கொக்குவில் மேற்கைப் பிறப்பிடமாகவும், இணுவில் பரராஜசேகரப் பிள்ளையார் கோவிலடியை வதிவிடமாகவும், தற்போது கனடாவை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த செல்லையா பாலசுப்பிரமணியம் அவர்களின் 10ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி: 18-06-2026
எம் அன்பு தெய்வமே! பத்து ஆண்டு கடந்தும்
ஓயவில்லை உம் உயிருள்ள நினைவுகள்
அன்பாய் கதைக் கூறி அழுத்தமாய்
அரவணைத்து அனுபவத்தை அறிவுரையாக்கி
எமது வாழ்வின் வழிகாட்டியானீர்!
குருதியை வியர்வையாக்கி
கடமையை போர்வையாக்கி
விழுதாயிருந்து கழுகாய் காத்தீரே!
சொல்லாமல் பிரிந்ததேனோ
திரும்ப முடியாப் பாதையிலே!
நெடுவழிப் பயணம் செய்த நீர்
பயணிக்க முடியவில்லையென
பாதியிலேயே சென்றுவிட்டீரோ!
இம் மண்ணை விட்டு
இல்லை பயணம் முடிவுப்பெற்றதென
சென்று விட்டீரோ விண்ணிற்கு
கண்களில் நீர் சூழ கலங்கி நிற்கின்றோம்
உம் நிழற்படம் முன்னே...
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்..