யாழ். கொக்குவில் வேம்படி முருகமூர்த்தி கோவிலடியைப் பிறப்பிடமாகவும், உடுவில் தெற்கு மானிப்பாயை வதிவிடமாகவும் ஆணைக்கோட்டை வீதி கொக்குவிலை வதிவிடமாகவும் கொண்டிருந்த பாலசிங்கம் தர்மபூபதி அவர்களின் 11ம் ஆண்டு நினைவஞ்சலி.
உயிருக்குள் உயிரான ஒளியின்
திருமுகமே வாசமலராய் வந்து
மணம் பரப்பிவிட்டு வீசும்
காற்றோடு கலந்திட்ட மாயமென்ன!
உலகையே எங்களுக்கு தந்தாலும்
உங்களை போல் இணை ஆகுமா
அம்மா உங்கள் கருவிலே
சுமந்து எங்களுக்கு உயிர்கொடுத்தாய்..!
இன்று நீங்கள் இன்றி
எங்கள் உயிர் விலகி நிற்கின்றது
அம்மா... ஆண்டுகள் பதினொன்று
கடந்தாலும் அமைதியின்றி வாழ்கின்றோம்
உங்கள் நினைவுடனே அம்மா!
எல்லோரையும் தவிக்கவிட்டு
ஏன் இந்தப் பிரிவைத் தந்தாய்
அன்புடனும் பாசத்துடனும்
எம்முடன் கூடிக் குலாவி
மகிழ்ந்திருந்து தெய்வமாகி விட்டாயே!
உங்கள் நினைவில் இன்றுவரை வாடுகின்றோம்..!
பிள்ளைகளும், மருமக்களும், பேரப்பிள்ளைகளும்,
உங்கள் ஆத்மாவின் சாந்தி வேண்டி
இறைவனை எப்பொதும் பிராத்திப்போம்!!!