யாழ். அனலைதீவு 4ம் வட்டாரம் ஐயனார் கோயிலடியைப் பிறப்பிடமாகவும், கனடா Woodbridge ஐ வசிப்பிடமாகவும் கொண்ட அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.
பாக்கியம் தாயே எங்கள் அம்மா
உங்கள் உடலின் உயிர்மூச்சு நின்று
மாதம் ஒன்று ஓடிமறைந்தும்
அழுகையும் ஓயவில்லை
கவலையும் தீரவில்லை
அம்மா அருகிருந்து மகிழ்ந்த பொழுதுகள்
நினைந்திட தினம் கண்கள் நிறையுதே
நித்தம் பிள்ளைகள் பேரர்கள் மருமக்கள்
நினைவோடு
இருந்த எங் கள் தாயே
அப்பாவை இழந்துதவித்திட
தாயும் தந்தையுமாய் தாங்கி
நின்றவாறு
ஓயாது உறங்காது வளர்த்தீர்களம்மா
உங்கள் பிரிவு என்றும் ஆறமுடியா
சோகமே
மீண்டும் பிறந்து வந்துவிடுதாயே
பாக்கிய
அம்மாவின் அழகிய பாதங்களில்
பூச்சொரிந்து வணங்குகின்றோம் !
ஓம்சாந்தி!
அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்று வரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.