9ம் ஆண்டு நினைவஞ்சலி

Tribute
13
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.
சுவிஸ் Basel Aesch மாநகரைப் பிறப்பிடமாகவும், Basel ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த பகீரதன் அஜித் அவர்களின் 9ம் ஆண்டு நினைவஞ்சலி.
எங்கள் அன்புச் செல்வமே அஜித்...
எங்களோடு நீண்ட நெடுநாட்கள்
வாழ்வாய் என்றும் எங்களுக்கு
பக்கபலமாய் இருப்பாய் என்றிருந்தோம்!
அத்தனையும் நீ கனவாக்கி
எங்கு சென்றாய் ஐயா!
கண்மூடி விழிப்பதற்குள் கணப்பொழுதில்
நடந்தவைகள் நிஜம் தானா என்று
நினைக்கும் முன்னே மறைந்தது ஏனோ?
நான் பார்க்கும் திசையெல்லாம்
உன் உருவே தெரியுதப்பா !!
நிஜத்திலே வந்துவிட்டால்
நிம்மதியாய் நாம் இருப்போம்
வாராது சென்றதனால்
தீராது சோகமப்பா!!!
நீ இல்லா வெறுமை உலகத்தில்
உன் நினைவுகளுடன் எம் பயணம்
நாளும் தொடர்கிறது உன் வரவை எதிர்பார்த்து..!
உன் பிரிவால் துயருறும்
குடும்பத்தினர்..!
தகவல்:
குடும்பத்தினர்