25ம் ஆண்டு நினைவஞ்சலி
Tribute
1
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.
யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Montreal ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த அகஸ்டின் பாக்கியநாதன் அவர்களின் 25ம் ஆண்டு நினைவஞ்சலி.
“உயிர்ப்பும் உயிரும் நானே என்னில் விசுவாசம்
கொள்பவன் இறப்பிலும் வாழ்வான்”
(ஆதி.11:25)
உம்மை இழந்து
ஆண்டுகள் இருபத்தைந்து ஆனாலும்
ஐயா உம் அன்பு முகமும்
அமைதியின் உருவமும்
நேசப் புன்னகையும் மறையவில்லை
நீர் இவ்வுலகில் நேர்வழி காட்டி
நாம் சென்ற பாதையெல்லாம்
நல்லவராய் வேண்டுமென்று
கண்மணி போல் காத்திருந்த
எம் தந்தையே! எங்கு சென்றாய்?
பாரினில் மதிப்புடனும்
பண்புடனும் வாழ்ந்தீர்!
எங்களையும் வாழ வைத்தீர்!
உம் பண்பும் மதிப்பும் உள்ள
பிள்ளைகளாக நாங்கள் வாழ்ந்திடுவோம்
ஆண்டுகள் இருபத்தைந்தல்ல
நம் மூச்சுள்ளவரை
உங்களை மறவோம் ஐயா!
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்...
தகவல்:
குடும்பத்தினர்