
யாழ். காரைநகர் பொன்னம்பலம் வீதியைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, கனடா Scarborough ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட அற்புதமலர் கணபதிபிள்ளை அவர்கள் 29-08-2020 சனிக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற குணராசா, செல்லமுத்து தம்பதிகளின் அன்பு மகளும், நெடுங்கேணியைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான கந்தையா கண்ணகை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
கந்தையா கணபதிபிள்ளை(பாலசிங்கம்- கனடா) அவர்களின் அன்பு மனைவியும்,
அஜந்தன்(கனடா), சாருஜன்(கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
சுமன், டிலக்ஸ்னி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்ற சிவலோகராஜ புஷ்பம், உருக்குமணிதேவி(இலங்கை), மல்லிகாதேவி(இலங்கை), ராஜேஸ்வரி(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான கார்த்திகேசு, நடராஜா, பரலோகராஜா மற்றும் திருநாதன்(இலங்கை), காலஞ்சென்ற நல்லையா, கெங்காதேவி(இலங்கை), கமலாதேவி(கனடா), பவளம்மா(நோர்வே), விமலாதேவி(நோர்வே) ஆகியோரின் அன்பு மைத்தினியும்,
இஷானி, ஹரி, மீரா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Accept our condolences Sri (nedunkerni) Melbourne Australia