யாழ். இளவாலையைப் பிறப்பிடமாகவும், வவுனியா சூசைப்பிள்ளையார் குளம் லூட்ஸ்வாசத்தை வசிப்பிடமாகவும் கொண்ட அதிரியாம்பிள்ளை அன்ரனி ஞானராஜா அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.
அன்னாரின் ஆன்மா இளைப்பாற்றிக்காக இறம்பைக்குளம் புனித அந்தோனியார் ஆலயத்தில் 16-12-2023 சனிக்கிழமை அன்று மு.ப 06.00 மணிக்கு ஒப்புக்கொடுக்கப்படும் திருப்பிலியில் பங்கு கொண்டு செபிக்குமாறு உறவினர், நண்பர்கள் அனைவரையும் அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். அதனைத்தொடர்ந்து நடைபெறும் மதியபோசனை நிகழ்விலும் கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.
அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்று வரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.
I was saddened to hear that the beautiful person passed away. My thoughts are with you and your family.