Clicky

மரண அறிவித்தல்
அன்னை மடியில் 25 MAR 1992
ஆண்டவன் அடியில் 09 JUN 2022
செல்வி அஸ்வினி சுந்தரமூர்த்தி
வயது 30
செல்வி அஸ்வினி சுந்தரமூர்த்தி 1992 - 2022 Toronto, Canada Canada
Tribute 10 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். புங்குடுதீவு 2ம் வட்டாரம்,  11ம் வட்டாரம் ஆகிய இடங்களை பூர்வீகமாகவும், கனடா Toronto வைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட அஸ்வினி சுந்தரமூர்த்தி அவர்கள் 09-06-2022 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா கனகம்மா தம்பதிகள் மற்றும் இராசையா மனோன்மணி தம்பதிகளின் அன்புப் பேத்தியும்,

சுந்தரமூர்த்தி, காலஞ்சென்ற நாகேஸ்வரி(ஈசு) தம்பதிகளின் கனிஷ்ட புதல்வியும்,

ரஞ்சித்குமார், காலஞ்சென்ற லிங்கதாஸ் ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

மேனகா அவர்களின் அன்பு மைத்துனியும்,

ஜெயலட்சுமி, காலஞ்சென்ற குமரகுருபரன், ரஞ்சனிதேவி தவராசா, ராதா கோடீஸ்வரன், திருமகள் உதயகுமார் ஆகியோரின் அன்புப் பெறாமகளும்,

அருணகிரிநாதன் சரஸ்வதி, இராசரத்தினம் சியாமளா, காலஞ்சென்ற சுரேஷ், திருநாவுக்கரசு லோசினி ஆகியோரின் அன்பு மருமகளும்,

அனுசா, அதீஷ், டைரோஷ், ரிதுஷா, ஜாய்ஷினி, லுஷினி ஆகியோரின் அன்பு மாமியும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

தொடர்புகளுக்கு

மூர்த்தி - தந்தை
குமார் - சகோதரன்

Summary

Photos

No Photos

Notices