திதி:09/07/2026
யாழ். நீர்வேலி தெற்கு கந்தசாமி கோவிலடியைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா Harrow ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த அசோகமலர் அருந்தவநாதன் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவஞ்சலி.
எம்மோடு வாழ்ந்த தெய்வம்
மறைந்து ஓராண்டு ஆனதம்மா!
உடலில் சுமந்து, உயிரை பகிர்ந்து,
உருவம் கொடுத்த உயிரே!
இரவெல்லாம் விளக்காக விழித்திருந்து,
எமக்காக உன் உறக்கத்தைத் துறந்து
மகிழ்ந்திருந்தாய் தாயே!
உங்கள் வாழ்வுதனை வர்ணிக்க வார்த்தைகள் தேடி
தவிக்கின்றோம் தாயே!
யாருக்கு யார் ஆறுதல் சொல்வதென்று தெரியாமல்
நாங்கள் கலங்கி நிற்கிறோம் தாயே!
உங்கள் பிரிவு எங்கள் மனதை வாடுதம்மா!
உங்களின் நினைவும் அன்பும்
எங்கள்
வாழ்வின் ஒளியாகத் தொடர்கிறது.
உங்கள் ஆத்மா சாந்தி அடைய
இறைவனை பிரார்த்திக்கிறோம்.
ஓம் சாந்தி!
*One Year Without You*
A year has passed since you left us,
yet you remain our guiding light.
We search for words to describe your life,
but fall silent in the depth of love.
We stand in quiet grief,
not knowing who comforts whom.
Your absence weighs upon our hearts,
yet your love still leads our way.
We pray for your soul to rest in peace.
Om Shanthi!