10ம் ஆண்டு நினைவஞ்சலி

Tribute
0
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ்ப்பாணத்தை பிறப்பிடமாகவும், லண்டனை வதிவிடமாகவும் கொண்டிருந்த அருந்தவம் இராஜநாயகம் அவர்களின் 10ம் ஆண்டு நினைவஞ்சலி.
தாயே நீ எம்மைப் பிரிந்து
தசாப்த காலமானதுவோ!
அருள் விளக்கே நீ அணைந்தது
சில நாழிகை போலன்றோ!
சிந்தனையில் தோன்றுதம்மா
நீ எமை விட்டுப் பிரிந்தாலும்- தாயே
நித்தலும் உன் நினைவு நெஞ்சில் நிழலாடுதம்மா
எம் சொப்பணத்தில் நீ சோதி வடிவாகி வந்து
அற்புதங்கள் பல புரிகின்றாயம்மா
அரும்பசி வந்தபோது அம்மா உன் நினைப்பு
ஆற்றா நோய்க்கும் நீயே தானேயம்மா மருந்து
ஆயிரம் உறவுகள் பூமியில் இருந்தும்- என்ன
அன்னையே உனக்கு ஒப்பாகுமோ ஓர் உறவு
உன்னைத் தொழுதேத்த எம் முன்னே நீ இல்லையம்மா
உன்னைப் போல் ஓர் தெய்வம் இப்புவியில் இல்லையம்மா
மனக்கண்ணில் நாளும் உனைக்கண்டு துதிப்போமம்மா
மண்ணில் எம் உயிர் வாழும் காலம் வரை!
உங்கள் ஆத்மா சாந்திபெற
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்..
தகவல்:
குடும்பத்தினர்
கண்ணீர் அஞ்சலிகள்
No Tributes Found
Be the first to post a tribute