Clicky

1ம் ஆண்டு நினைவஞ்சலி
தோற்றம் 19 JUL 1932
மறைவு 29 JAN 2023
அமரர் அருணாசலம் சரஸ்வதி
வயது 90
அமரர் அருணாசலம் சரஸ்வதி 1932 - 2023 Kuala Lumpur, Malaysia Malaysia
Tribute 0 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.

மலேசியா கோலாலம்பூரைப் பிறப்பிடமாகவும், யாழ். வட்டுக்கோட்டையை வதிவிடமாகவும் கொண்டிருந்த அருணாசலம் சரஸ்வதி அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

எம்முன்னே வாழ்ந்த தெய்வம் மறைந்து
ஓராண்டு ஆனதம்மா!

பொன்னும் பொருளும் கொட்டிக் கொடுத்தாலும்
பெற்றவள் அன்பு போல் வருமா?
நம்மைப் பெற்றவளின் தாய்மடியைத் தருமா??

கருப்பைக்குள்ளிருந்து நாம் காலுதைத்த போது...!
விருப்புற்று எம்பாதம் முத்தமிட்ட தாயே!
உடலில் சுமந்து உயிரை பகிர்ந்து
உருவம் கொடுத்த உயிரே!

இரவெல்லாம் விளக்காக விழித்திருந்து
எமக்காய் உன் உறக்கம்
துறந்து மகிழ்ந்திருந்தாய் அம்மா…!

நீ இல்லாமல் அரண்மனையாய் இருந்தாலும்
அநாதையாய் தவிக்கின்றோம்…!
ஆயிரம் கடவுளின் வரமிருந்தாலும் தாயே
உந்தன் ஆசிர்வாதத்திற்கு ஈடாகுமா?

அடிமுடி அறியமுடியா அற்புதமே!
தாலாட்டி சோறூட்டி வளர்த்த சொற்பதமே!
தினம் தொழுகின்றோம் உன் பொற்பாதமே!

இம்மைக்கும் ஏழேழு பிறவிக்கும்
அன்போடு எமை ஆழ்வாய்!
என்றென்றும் எழிலோடு- எம்
நெஞ்சிலெ நீ வாழ்வாய்!

உங்கள் ஆத்மா சாந்திக்காகப் பிரார்த்திக்கின்றோம்!
ஓம் சாந்தி! ஓம் சாந்தி! ஓம் சாந்தி!

தகவல்: குடும்பத்தினர்

கண்ணீர் அஞ்சலிகள்

No Tributes Found Be the first to post a tribute

Photos

Notices

மரண அறிவித்தல் Sun, 29 Jan, 2023