10ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 29 MAY 1955
இறப்பு 21 JUN 2011
அமரர் அருணாசலம் மங்களேஸ்வரன் (மங்கா)
HomeLife Landmark Realtor
வயது 56
அமரர் அருணாசலம் மங்களேஸ்வரன் 1955 - 2011 எழுவைதீவு, Sri Lanka Sri Lanka
Tribute 1 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். எழுவைதீவைப் பிறப்பிடமாகவும், கனடா Markham ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த அருணாசலம் மங்களேஸ்வரன் அவர்களின் 10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆண்டு பத்து ஆனாலும்
ஆற முடியவில்லை எம்மால்
இப்பூமியில் உங்களை நாம் இழந்த துயரை
ஈடு செய்ய முடியாமல் தவிக்கின்றோம்...

அன்பான அப்பா உங்கள் முகம் காண
ஏங்கித் துடிக்கின்றோம் எங்களை வழிநடத்தி
அறிவூட்டவேண்டிய நீங்கள் பாதியில் விட்டுச் சென்றதேன்!

நீங்கள் மறைந்து போன பின்பும்
உங்கள் நினைவுகளை சுமந்த உறவுகளின்
நெஞ்சமெல்லாம் கண்ணீரால் நனைந்து
போகின்றதய்யா!

அப்பா என்றழைக்க யாருமற்று தவிக்கின்றோம்
உரிமை சொல்ல ஆயிரம் உறவுகள் இருந்தாலும் 
அப்பா என்ற உறவுக்கு யாருமே நிகர் இல்லை
என்பதை நாங்கள் புரிந்துகொண்டோம் அப்பா
நீங்கள் மறைந்து பத்து ஆண்டு ஆனாலும்
உங்கள் நினைவுகள் எம்மை விட்டு போகாது!!!

என்றும் உங்கள் நினைவால் வாடும்
மனைவி, பிள்ளைகள், மருமகள், பேரன்....

தகவல்: குடும்பத்தினர்

Summary

Photos

No Photos