Clicky

1ம் ஆண்டு நினைவஞ்சலி
அன்னை மடியில் 19 JAN 1968
இறைவன் அடியில் 05 NOV 2022
அமரர் அருணராஜா தங்கராஜா
வயது 54
அமரர் அருணராஜா தங்கராஜா 1968 - 2022 பெரியகல்லாறு, Sri Lanka Sri Lanka
Tribute 1 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

மட்டக்களப்பு பெரியகல்லாறைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த அருணராஜா தங்கராஜா அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

முதலாம் ஆண்டு நினைவு நாள் வந்ததோ?
ஒவ்வொரு நிமிடமும் உன் நினைவுதான் அப்பா!
ஆயிரம் உறவுகள் இருந்தாலும்- அப்பா என
அழைப்பதற்கு நீங்கள் இல்லையே அப்பா!

கனகாலம் எம்மோடு கரிசனையாய்
வாழ்வீர்கள் என்று நம்பி இருந்தோம்!
கணப்பொழுதினில் வந்த செய்தி
எங்களை எல்லாம் கதி கலங்க வைத்ததப்பா!

உலகை விட்டுப் பிரிந்தாலும்- உங்கள் நினைவு
எங்கள் நெஞ்சில் தான் குடியிருக்கும்
உறவை விட்டுப் பிரிந்தாலும்- உயிரே
எங்கள் உயிர்மூச்சும் உம்மோடு தான் இருக்கும்!

நிழல் போலத் தொடர்ந்து வந்த அன்பே!
உணர்வோடு கலந்த உயிர்மூச்சை உள்ளடக்கி
கண்ணீரை காணிக்கையாக்குகிறோம்...

தகவல்: மனைவி, பிள்ளைகள்

Photos

Notices

மரண அறிவித்தல் Thu, 10 Nov, 2022