Clicky

10ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 03 APR 1934
இறப்பு 19 APR 2016
அமரர் அருணகிரி கந்தையா (செட்டியார்)
வயது 82
அமரர் அருணகிரி கந்தையா 1934 - 2016 வேலணை மேற்கு, Sri Lanka Sri Lanka
Tribute 2 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.

யாழ். வேலணை மேற்கு சிற்பனை முருகன் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்டிருந்த அருணகிரி கந்தையா அவர்களின் 10ம் ஆண்டு நினைவஞ்சலி.  

ஆண்டு பத்தாகியும்
எங்களால் ஆறமுடியவில்லை
உங்கள் பிரிவால்
வடியும் கண்ணீரும் காயவில்லை

பாசமழை பொழிந்து
நேசமாய் எமை வளர்த்து
துணிவுடனே நாம் வாழ
வழியதனைக் காட்டிவிட்டு
எமைவிட்டு சென்றதெங்கே?

"காலங்கள் கடந்து போகும் ஆனால்
ஆனால் அப்பா உங்கள்  நினைவுகள் மட்டும்
காலம்தனை வென்று எம்மிடத்தில் நிற்கும் - எம்
கண்ணிறைந்த கண்ணீரோடு அப்பா..!

இன்றுடன் 10ஆண்டுகள் ஓடி
மறைந்தாலும் உங்கள் நினைவுகள்
என்றென்றும் எம்மை விட்டகலாது.

உங்கள் ஆத்மா சாந்தியடைய
வேலனை சிற்பனை முருகனைப் பிரார்த்திக்கின்றோம்!

ஓம் சாந்தி! ஓம் சாந்தி! ஓம் சாந்தி!  

தகவல்: மனைவி - இலட்சுமி, மகன் - குகன்

Summary

Photos

No Photos

Notices