10ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் அருணாசலம் நமசிவாயம்
இளைப்பாறிய ஆசிரியர்-கொக்குவில் இந்துக்கல்லூரி, கோப்பாய் கிறிஸ்தவக்கல்லூரி, புல்லாங்குழல் வித்துவான்-கலாபூஷணம், வேணுகானமணி
வயது 88
Tribute
1
people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். திருநெல்வேலி நல்லூரைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த அருணாசலம் நமசிவாயம் அவர்களின் 10ம் ஆண்டு நினைவஞ்சலி.
அணையாத தீயினில்
அலையான சுவாலையாய்
பத்து வருடங்களாகியும்
அனல் கக்கி எரியுதையா
எங்கள் அப்பாவே உங்கள் நினைவுகள்
அன்பின் அடையாளமே அரவணைப்பின் உதாரணமே
பண்பின் திருவுருவே பாசத்தின் இலக்கணமே
நேசத்தின் பிறப்பிடமே நிறைந்திட்ட குல விளக்கே
வீசும் காற்றினிலும்
நாம் விடும் மூச்சினிலும்
எட்டு திக்குகளிலும் உம்
நினைவால் வாடுகிறோம் அப்பா!
வானத்தை விட்டு நிலவையும்
வாசத்தை விட்டு மலரையும்
பிரிக்க முடியாது- அதுபோல
உங்கள் நினைவுகளை- எங்கள்
நெஞ்சை விட்டும் விலக்கமுடியாது
உங்கள் ஆத்மா சாந்தியடைய
எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்..!
தகவல்:
குடும்பத்தினர்
Rest In Peace. He was my class teacher in 1961. I was studying grade 5 then. Ohm Sakthy.