யாழ். தாவடியைப் பிறப்பிடமாகவும், ஆனைக்கோட்டை பொன்னையா ஒழுங்கை, கனடா Toronto ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட ஆறுமுகதாஸ் கந்தையா அவர்கள் 23-04-2020 வியாழக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், தாவடியைச் சேர்ந்த கந்தையா பொன்னம்மா தம்பதிகளின் மூத்த மகனும், ஆனைக்கோட்டையைச் சேர்ந்த இராசையா, சின்னத்தங்கச்சி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
பத்மராணி அவர்களின் அன்புக் கணவரும்,
பிரமிளா, பாஸ்கரன்(லண்டன்), நிர்மலா(கனடா), காலஞ்சென்ற முரளிதரன்(லண்டன்), சிவகரன்(நோர்வே) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
அருமைத்துரை, காலஞ்சென்ற மனோன்மணி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
பொன்னம்பலம், முருகன், ரஞ்சினி, கீதா, விஜி ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான புஷ்பராஜா, பத்மராஜா, யோகராஜா, நடராஜா, புஸ்பராணி மற்றும் மகாராஜா, லீலாவதி, நடராஜா ஆகியோரின் அருமை மைத்துனரும்,
ஷர்மிலா, சரண்யா, ஜனனி, நிக்லஸ், கவின்நாத், சுவாதி, ராகவி, கபிலன், கவாட் பரதன், நிவாஷனி, அருச்சுன், ருக்ஷானா, அனோஜன் ஆகியோரின் பாசமிகு பேரனும்,
ஆரியா, சைலா ஆகியோரின் பாசமிகு பூட்டனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.