யாழ். கொடிகாமத்தைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட ஆறுமுகம் யோகராசா அவர்கள் 28-05-2021 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற ஆறுமுகம், வள்ளிநாயகி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற கதிரேசு, இராசம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
ரதிதேவி அவர்களின் அன்புக் கணவரும்,
யவாஸ்கர்(தனியார் நிறுவனம்- கொழும்பு), காவேரி(கிராமிய வீடமைப்பு அமைச்சு- கொழும்பு), வர்ச்சிகா(ஆசிரியை- திருகோணமலை புனித சூசையப்பர் கல்லூரி) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
அருணா, கர்ஜின்(உதவிச் செயலாளர்- வெளிநாட்டு வேலை வாய்ப்பு இராஜங்க அமைச்சு) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
துரைசாமி, தியாகராசா, இராசரத்தினம், தங்கராசா(லண்டன்), செல்வராசா(கனடா), ஞானச்சந்திரன்(கனடா), ரவீந்திரன்(லண்டன்), விமலாதேவி(சுவிஸ்), லீலாவதி(கனடா), மாலா(டென்மார்க்), தயாளன்(கனடா), காலஞ்சென்றவர்களான பாக்கியலட்சுமி, அசோகன், மனோகரன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்ற ரவீந்திரன், ரகுநாதன், உதயகுமார் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 30-05-2021 ஞாயிற்றுக்கிழமை மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் வேவில் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
ஆழ்ந்த அனுதாபங்கள்