யாழ். நயினாதீவு 8ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், புங்குடுதீவு 5ம் வட்டாரம், கச்சேரி நல்லூர் வீதி ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்டிருந்த ஆறுமுகம் விசுவலிங்கம் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
எப்பொழுதும் எம்மனதில்
நிறைந்திருக்கும் ஐயாவே
அழகிய உங்கள் சிரிப்பெங்கே
இனிமையான பேச்சுமெங்கே
காணத்துடிக்கிறது எம்மனம்
தேடுகிறோம் காணவில்லை
உங்கள் கண்களில் கண்ணீரை நாம் கண்டதில்லை
ஆயீனும் எம் கண்ணீரை அணைத்தீர்கள்
உங்களின் பாசத்திற்கு இல்லையே ஆழம் ஆனால்
எம் கவலைகளைச் சொல்வதற்கு இல்லை வார்த்தைகள்
ஆண்டு ஒன்று ஓடினாலும் ஆறுதல் பெருகினாலும்
அந்த நாளை நினைக்கையில் அருவியாய் கண்ணீர் ஊற்றுகின்றது
ஓராண்டு ஓடிய வேகம் தீராத சோகங்களுடன்
அன்புள்ள ஐயாவே!
எங்களை தவிக்க விட்டு விட்டு
எங்கே சென்றீர்கள் ஐயா!
அன்பையும் பண்பையும் காட்டி வளர்த்தீர்களே!
உங்கள் நினைவுகளை மட்டும் விட்டு
விட்டு சென்றுவிட்டீர்களே!
காலங்கள் சென்றாலும்
உங்கள் நினைவுகள் அழியாது ஐயா!
என்றென்றும் எங்களின் இதயத்தில்
இருப்பீர்கள் ஐயா!
உங்களின் பாத அடி தொடர்ந்து செல்வோம்
உங்களின் நினைவுகளோடு...
என்றென்றும் உங்கள் நினைவுகளோடு
வாழ்ந்து கொண்டிருக்கும்
உங்கள் மனைவி, பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள்,
சகோதரர்கள், உற்றார், உறவினர், நண்பர்கள்...