

யாழ். புங்குடுதீவு 10ம் வட்டாரம் பொன்னாந்தோட்டத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வதிவிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த ஆறுமுகம் விஜயரட்ணம் அவர்களின் 10ம் ஆண்டு நினைவஞ்சலி.
மறவா நினைவுகளை மனதோடு தந்துவிட்டு,
இறையோடு சென்று இன்று பத்து ஆண்டுகள்
வார்த்தைகளால் சொல்ல முடியாத
வலிகள் உங்கள் இழப்பு!
இருந்தபோதே எம்மைக்காத்த
காவல் தெய்வமே - இறந்தாலும்
எம்மை இறையாய் காப்பீர் !
ஆண்டுகள் எத்தனை கடந்தாலும்
எங்கள் ஆழ்மனங்களின் ஆணிவேர் நீங்கள்
ஆறாத்துயரில் ஆழ்த்திவிட்டு
மீளாத்துயில் கொண்ட
எங்கள் அன்பு தெய்வமே!
பத்து ஆண்டுகள் உருண்டு ஓடினாலும்
அப்பா! உங்கள் நினைவுகள் எம்மை
விட்டு அகலாது
“எங்கள் வாழ்க்கையில் அர்த்தம் சொல்ல
பூக்களின் வண்ணம் கொண்டு பிறந்த
தெய்வமே, அப்பா!
இன்றும் என்றும் உங்கள் நினைவுகள் தான்
எங்கள் வழிகாட்டி.....
Though I never had the honor of
meeting you, I see your love and
guidance everyday through your daughter ”- Adrian & Deepa
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!!!