பிறப்பு என்பது இயற்கையின் நியதி இறப்பு என்பது என்ன விதிவிலக்கா? இருந்தும் இத்தனை விரைவில் வருவது இறைவன் செய்த சதிக்கணக்கா? பிரிவினைத் தாங்கும் வரங்களைத் தானே இறைவனைத் தினம்தினம் வேண்டி அவ் வரத்தினை தந்திட மறுத்த இறைவன் உன் உயிரினை மீட்டுத் தருவனோ?
மீளாத்துயில் கொண்டு எம்மை ஆறாத்துயரில் ஆழ்த்திச் சென்றீரே? கலையாத நினைவுகளுடன் உதிரும் கண்ணீர் பூக்களால் அர்ச்சித்து உங்கள் ஆத்மா சாந்தியடைய எங்கள் கண்ணீர் துளிகளைக் காணிக்கையாக்குகிறோம்.
ஓம் சாந்தி!! சாந்தி!! சாந்தி!!