அமரர் திரு.ஆறுமுகம் வேலாயுதபிள்ளை அவர்கள் அமைதியான சுபாவமும், நற்பண்பு முடையவர், எல்லோருடனும் அன்பாகப் பேசிப்பழகுபவர். அன்னார் துணைவியாருடன் இணைந்து பெரிய நாவலடி, கொடிகாமத்தில் சிவகாமி அம்மன் ஆலயத்தை அமைத்து சைவசமய முறைப்படி கட்டுப்பாடுகளுடன் திறம்பட நிர்வகித்து வந்தவர். பிரதி உபகாரம் பாராமல் பக்தர்கள் எல்லோருக்கும் இறை அருள் கிடைக்க வழிகாட்டியவர். சைவ சமய வளர்ச்சியில் செயல் வடிவம் காட்டிய பெருந்தகை. அன்னாரின் பிரிவு குடும்பத்தாருக்கு மட்டுமன்று எமது சமுதாயத்துக்கும் பேரிழப்பாகும். அன்னாரின் பிரிவால் துயருறும், மனைவி, பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள், உற்றார். உறவினர், நண்பர்களுக்கு ஆறுதல் கூறி அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப பிரார்த்திக்கின்றோம். சு.தங்க மயிலோன் முன்நாள் கி. உத்தியோகத்தர் கொடிகாமம் ,பிரான்ஸ்