10ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் ஆறுமுகம் வைத்திலிங்கம்
இறப்பு
- 24 NOV 2014
Tribute
1
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
யாழ். நெடுந்தீவு கிழக்கைப் பிறப்பிடமாகவும், உருத்திரபுரம் சிவநகரை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த ஆறுமுகம் வைத்திலிங்கம் அவர்களின் 10ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆண்டு பத்து ஆனதப்பா
ஆறவில்லை எங்கள் மனம் சகோதரனே
ஆயிரம் உறவுகள் அரவணைக்க இருந்தாலும்
சகோதரனே என்ற அன்பிற்கு ஈடாகுமா?
எங்கள் உயிர் மூச்சாய்
எம்மோடு வாழ்ந்திருந்த சகோதரனே
எமையெல்லாம் விட்டு
இறைவன் அருகில் சென்றீரோ!
வரமாக எமக்கு கிடைத்த சகோதரனே
வளமாக எமைக் காத்த ராஜாவே
உமை வருத்தி எமைச் சுமந்தீர்
உண்மை அன்பை எமக்களித்தீர்
நீங்கள் எங்களை பிரிந்தாலும்
எங்கள் ஒவ்வொரு அசைவிலும்
நீங்கள் வாழ்ந்துகொண்டிருப்பீர்கள்!
உங்கள் பிரிவின் நினைவுகளோட வாழ்ந்து
கொண்டிருக்கும் உங்கள் அன்பு தம்பி தியாகராசா..!
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்..!
தகவல்:
ஆறுமுகம் தியாகராசா(பிரான்ஸ்) - வைத்தியர்(ஆறுமுக வைத்திய நிலையம் - அளவெட்டி, கிளை - சங்கானை).