யாழ். கரவெட்டியைப் பிறப்பிடமாகவும், முல்லைத்தீவு கொக்குத்தொடுவாயை நிரந்தர வசிப்பிடமாகவும், புதுக்குடியிருப்பு 2ம் வட்டாரம் கோம்பாவிலை வதிவிடமாகவும் கொண்ட ஆறுமுகம் துரைசிங்கம் அவர்களின் நன்றி நவிலல்.
அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்று வரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.
அன்னாரின் அந்தியேட்டி கிரியைகள் 24-09-2023 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 06:00 மணியளவில் கீரிமலை புனித தீர்த்தக்கரையிலும் வீட்டுக்கிருத்திய கிரியைகள் 26-09-2023 செவ்வாய்க்கிழமைஅன்று பி.ப 11.00 மணியளவில் அவரது இல்லத்திலும் நடைபெறவுள்ளது. அத்தருணம் தாங்கள் வருகை தந்து அன்னாரது ஆத்மசாந்திப் பிரார்த்தனையிலும் அதனைத் தொடர்ந்து நடைபெறும் மதியபோசனத்திலும் கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கிறோம்.
வீட்டு முகவரி:
வெண்புறா வீதி,
2ம் வட்டாரம்
கைவேலி,
புதுக்குடியிருப்பு.