
யாழ். வடமராட்சி மயிலியதனையைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி திருவையாறு, நீர்வேலி ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த ஆறுமுகம் துரைசிங்கம் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி: 20-02-2022
எம் அன்பு உறவே அப்பா!
எங்கு தேடுவோம் உமை அப்பா!
கண்ணைக் காக்கும் இமை போல
எம்மைக் காத்த எம் அப்பா!
நீர் வெயிலில் காய்ந்து
எமக்கு நிழல் கொடுத்தீரே
மழையில் நனைந்து
எமக்கு குடை கொடுத்தீரே
இருக்கும் வரையில்
உந்தன் கருணையை யாம் அறியோம்
ஓராண்டு ஓடிற்றோ?
உமை இவ்வுலகில் நாமிழந்து
வையத்தை விட்டு நீர் நீங்கிப் போனாலும்
நீங்காமல் உம் நினைவு
எம்மோடு நிறைந்திருக்கும்
தேடிக் களைத்து விட்டேன் உங்களை
ஏங்கும் முன் தாங்கி நின்றீர்கள்
கேட்கும் முன் கொடுத்தீர்கள்
வாழ்வின் வழியைக் காட்டினீர்கள்
எல்லாவற்றின் மதிப்பையும்
அன்பால் சொன்னீர்கள்
துக்கமோ, சுகமோ உங்கள்
அரவணைப்புக்காக ஏங்குகின்றேன்
தங்கள் ஆத்மா சாந்தியடைய
எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்..