Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 29 MAY 1964
இறப்பு 26 MAY 2020
திரு ஆறுமுகம் தொண்டமான்
Leader of Ceylon Worker's Congress , Cabinet minister of livestock and rural community development
வயது 55
திரு ஆறுமுகம் தொண்டமான் 1964 - 2020 தமிழ்நாடு, British Indian Ocean Terr. British Indian Ocean Terr.
Tribute 5 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.

இலங்கை சமூக வலுவூட்டல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சர் திரு. ஆறுமுகன் தொண்டமான் அவர்கள் 26/05/2020 அன்று காலமானார். அன்னாரின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திப்பதோடு, அன்னாரின் பிரிவால் வாடும் அனைவருக்கும் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கின்றது RIPBOOK, IBC, தமிழ்வின் மற்றும் லங்காசிறி இணையதளங்கள்...

அன்னாரின் நினைவாக...

மலையக மக்கள் சேவகன்
அலை கடலாய் தொண்டர் கொண்டவன்
விலை போகாத வீர மறவன்
தலை கொடுத்துத் தர்மம் காத்தவன்...

தினக் கூலி உயர திறன் கொண்டு
மனம் குமிறி வாதிட்டவர்
கனவு நனவாகும் காலம் மலரும்முன்
உனது உயிர் போனதேனோ..
.

விழிநீர் சொரிந்திட வீதியில் 
நாம் அழுது தவிக்கின்றோம்
பாவியான எங்களை விட்டு எங்கே போனீர்...

கருஞ் சிறுத்தை ஒன்று காலமானதேனோ
வரும் அழுகை வாயால் கூற வார்த்தை இல்லை
உருக் கொண்ட தேச மக்கள்
உமை எண்ணி ஏக்கமுறுவதால் - ஒருமுறை
திருமுகம் காட்டுமய்யா...

கமலக் கண்ணனே கட்டி மீசைக் காரனே
அமலத் தாமரை இதழ் கொண்டு
ஆற்றும் உரை இனி ஏது?

மக்கள் சேவகன் மண்ணில் சரிந்தான்
துக்க மிகுதியால் துடி  துடிக்கின்றோம்...
 

உங்கள் ஆத்மா சாந்தியடையப் பிரார்த்திக்கின்றோம்...

தகவல்: RIPBOOK

Photos

No Photos

Notices