Clicky

மண்ணில் 10 DEC 1927
விண்ணில் 28 MAR 2023
அமரர் ஆறுமுகம் தங்கம்மா 1927 - 2023 புங்குடுதீவு 2ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
அன்பும் பண்பும் நிறைந்த எங்கள் ஆசை மாமியே உங்கள் பிரிவுச்செய்தி கேட்டு ஆறாத்துயரம் அடைந்தோம் பிறந்த மண்ணில் மாமி வீட்டில் மச்சாள்மார் மச்சான் எனக்கூடிக்குலாவி மகிழ்ந்தோம். பாடசாலை முடிந்து வரும்போது உங்கள் குரல் கேட்டு மகிழ்வோம் நன்மைகளிலும் தீமைகளிலும் பங்கு கொண்டோம் புலம்பெயர்ந்தோம் இழந்து விட்டோம்  அத்தனையையும் மாமி .இப்போ உங்களையும் இழந்துவிட்டோம் மாமி எங்கே காண்போமினி உங்கள் பிரிவால் துயருற்றிருக்கும் பிள்ளைகள் பேரப்பிள்ளைகள் பூட்டப்பிள்ளைகள்  அனைவருக்கும் எங்கள் குடும்பத்தின் சார்பில் ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்  கொள்கின்றோம்.                        திரு திருமதி ஶ்ரீதரன் பாக்கியலெட்சுமி குடும்பம்            யேர்மனி          LOHNE  (OLD)
Write Tribute