15ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் ஆறுமுகம் சிவதர்மன்
இளைப்பாறிய KKS சீமெந்து கூட்டுத்தாபன ஊழியர்
வயது 72

அமரர் ஆறுமுகம் சிவதர்மன்
1937 -
2010
கரம்பன் கிழக்கு, Sri Lanka
Sri Lanka
Tribute
2
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
யாழ். கரம்பன் கிழக்கைப் பிறப்பிடமாகவும், கோண்டாவில் மேற்கு KKS வீதியை வதிவிடமாகவும், கனடா ஒட்டாவாவை வதிவிடமாகவும் கொண்டிருந்த ஆறுமுகம் சிவதர்மன் அவர்களின் 15ம் ஆண்டு நினைவஞ்சலி.
எங்கள் அன்புத் தந்தையே!
ஆண்டு பதினைந்து மறைந்தாலும்
ஆறிடுமா எங்கள் துயரமய்யா?
கண் முன்னே வாழ்ந்த காலம்
கனவாகிப் போனாலும்
எங்கள் முன்னே உங்கள் முகம்
என்றும் உயிர் வாழும் எங்கள்
இதயமதில் இறுதி வரை நிலைத்து நிற்கும்
வானத்தை விட்டு நிலவையும்
வாசத்தை விட்டு மலரையும்
பிரிக்க முடியாது- அதுபோல
உங்கள் நினைவுகளை- எங்கள்
நெஞ்சை விட்டும் விலக்கமுடியாது
நெஞ்சில் உங்கள் நினைவுகளை சுமந்தே
நெடுங்காலம் நாம் இங்கே
நிலைத்து வாழ்வோமே
வானில் விண்மீனாய் இருந்து
எம் வாழ்வை வளப்படுத்துவீரே!
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!
தகவல்:
குடும்பத்தினர்
I missed you deeply mama, Forever Love. Om Shanthi