
யாழ். மயிலிட்டி திருப்பூரைப் பிறப்பிடமாகவும், தொண்டைமனாற்றை வதிவிடமாகவும் கொண்ட ஆறுமுகம் பொன்னுச்சாமி அவர்கள் 12-01-2019 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், ஆறுமுகம் சின்னத்தங்கம் தம்பதிகளின் அன்பு மகனும், நல்லத்தம்பி அன்னக்கண்டு தம்பதிகளின் அன்பு மருமகனும்,
தங்கரத்தினம் அவர்களின் பாசமிகு கணவரும்,
தங்கராணி(கனடா), சாந்தராணி(கனடா), மனோகரன்(கனடா), காந்தராணி(இலங்கை), துரைராசா(ராசா- கனடா), பாஸ்கரன்(கனடா), யமுனாராணி(கனடா), மீனாராணி(கனடா), குமரகரன்(கனடா), மோகனா(இலங்கை) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்றவர்களான பாக்கியம், ஆனந்தசிங்கம், சிவசுந்தரம் மற்றும் யோகராணி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்ற ஜெயக்கொடி, அரியரத்தினம், கெளரி, வெற்றிக்கொடி, ஜீவராணி, முரளி, கமலேந்திரன், சியாமளா, சுதர்சன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான இராசரத்தினம், பவளம் மற்றும் பவளம், ஆனந்தசிங்கம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
பேரப்பிள்ளைகளின் அன்புப் பேரனும்,
பூட்டப்பிள்ளைகளின் அன்புப் பூட்டனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 14-01-2019 திங்கட்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பி.ப 01:00 மணியளவில் தொண்டைமனாறு காட்டுப்புலம் இந்து மயானத்தில் பூதவுடல் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
An independent , kind and caring gentleman who has had a complete life. May his soul Rest In Peace in the eternity.