பூநகரி மட்டுவில் நாடு மேற்கைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Drancy ஐ வசிப்பிடமாகவும் கொண்ட ஆறுமுகம் பரமேஸ்வரி அவர்களின் 10ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி : 22-03-2026
மறவா நினைவுகளை மனதோடு தந்துவிட்டு,
இறையோடு சென்று இன்று பத்து ஆண்டுகள்
வார்த்தைகளால் சொல்ல முடியாத
வலிகள் உங்கள் இழப்பு!
இருந்தபோதே எம்மைக்காத்த
காவல் தெய்வமே - இறந்தாலும்
எம்மை இறையாக்காப்பீரே!
ஆண்டுகள் எத்தனை கடந்தாலும்
எங்கள் ஆழ்மனங்களின் ஆணிவேர் நீங்கள்
ஆயிரம் சொந்தங்கள் அருகினிலே இருந்தாலும்
அம்மா உங்களைப் போல் யார் வருவார்
அவணியிலே இருப்பிறவி அடைபவர்கள்
அகிலத்தின் உச்சியிலே அமர்ந்திடுவர்
அம்மா நீங்கள் நடந்த பாதையோரம் செல்கின்றோம்
வழியில்லை நடப்பதற்கு விழிநீர்கள் தான் சொரிகின்றன
விடையில்லை இவ்வுலகில் எமக்கம்மா
விடைதேடி எமைக்கார்த்த வைரவரை வேண்டுகின்றோம்
ஆத்மா சாந்தியடைய அருள்வேண்டி
அமைதியாய் அருளிக்கின்றோம்...