
யாழ். சாவகச்சேரி மட்டுவிலைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி வட்டக்கச்சியை வதிவிடமாகவும் கொண்டிருந்த ஆறுமுகம் பரமேஸ்வரன் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி:04/05/2023.
எம் அன்புத் தெய்வமே அப்பா
எங்களை விட்டுப்பிரிந்து இன்று
ஓராண்டு ஆனது அப்பா.
எத்தனை இன்னல்கள் வந்தாலும் அப்பா
நீங்கள் எம்மோடு இருக்கின்றீர்கள்
என்றெண்ணி வாழ்ந்தோம்
ஆறாத்துயராய் ஆனதே
உங்கள் பிரிவு எம்முள்ளே.
அன்போடு பண்பையும்
பாசத்தையும்
எம்முள் விதைத்து
எமை விட்டு
இறைவனடி சென்றீர்களே
இன்னும் வாழ்ந்திருக்கலாம்
அப்பா நீங்கள் எங்களோடு.
நீங்கள் இறைவனடி
சேர்ந்து ஓராண்டு
கடந்து விட்டாலும்
நீங்கள் எப்பொழுதும்
எம்முன் நிற்கின்றீர்கள்!
உங்கள் நினைவு எழும் பொழுதெல்லாம்
எங்கள் உள்ளம் ஏக்கத்தில் தவிக்கின்றது
கண்கள் உங்களை தேடுகின்றன!
நீங்கள் எங்களை பிரிந்தாலும்
எங்கள் ஒவ்வொரு அசைவிலும்
நீங்கள் வாழ்ந்துகொண்டிருப்பீர்கள்!
உறவுகளைத் தவிக்கவிட்டு
இமைகளை மூடிவிட்டாய்!
எமையெல்லாம் அழவிட்டு
இறைவனை நாடிவிட்டாய்!
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!
my heartfelt condolences