யாழ். சரவணை மேற்கைப் பிறப்பிடமாகவும், கோண்டாவில் கிழக்கு பழனியாண்டவர் கோவில் வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட ஆறுமுகம் பஞ்சாட்சரம் அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.
அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்று வரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.
அன்னாரின் அந்தியேட்டி கிரியைகள் எதிர்வரும் 10-03-2025 திங்கட்கிழமை காலை 7.00 மணிக்கு “கீரிமலை புனித தீர்த்தக் கரையிலும்”, வீட்டுக்கிருத்தியக் கிரியைகள் 13-03-2025 வியாழக்கிழமை பகல் 11.30 மணியளவில் அன்னாரின் இல்லத்திலும் நடைபெறும். அத்தருணம் தாங்களும் தங்கள் குடும்பசகிதம் வருகைதந்து அன்னாரின் ஆத்மசாந்திப் பிரார்த்தனையிலும், அதனைத் தொடர்ந்து நடைபெறும் மதிய போசன நிகழ்விலும் கலந்து கொள்ளும் வண்ணம் அன்புடன் அழைக்கின்றோம்.
முகவரி
பழனியாண்டவர் கோயில் வீதி,
கோண்டாவில் கிழக்கு,
கோண்டாவில்.