
யாழ். மீசாலையைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி முரசுமோட்டையை வசிப்பிடமாகவும் கொண்ட ஆறுமுகம் கிருஸ்ணசாமி அவர்கள் 04-12-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான ஆறுமுகம் வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான நாகநாதி சின்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சின்னாச்சிப்பிள்ளை அவர்களின் அன்புக் கணவரும்,
காலஞ்சென்றவர்களான வைரமுத்து, கனகலட்சுமி, கனகம்மா, நாகம்மா மற்றும் இராசபூபதி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
கிருஸ்ணகுமாரி(சாவகச்சேரி), கிருஸ்ணகுமார்(சுவிஸ்), கருணகுமார்(ஜேர்மனி), காலஞ்சென்ற தேவகுமாரி, உதயகுமார்(லண்டன்), கிருபானந்தகுமார்(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
சரவணமுத்து, சிவாஜினி, தயாநிதி, யசோதா, சுபாஜினி ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
சபேசன், குகப்பிரியா, கபிலன், கீர்த்தனா, தனுசன், ஜனார்த்தனா, சகானா, தேனுஜன், சுருதி, மதுனன், கவின், பவிசன், பானுஜா, தரங்கிணி ஆகியோரின் பாசமிகு பேரனும்,
காசினி, அகிர்தன் ஆகியோரின் பாசமிகு பூட்டனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 05-12-2022 திங்கட்கிழமை அன்று நடைபெற்று பின்னர் முரசுமோட்டை ஐயன் கோயிலடி மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Live Link: Click Here
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
ஆழ்ந்த அனுதாபங்கள் குகதாசன் குடும்பம்