யாழ். ஆவரங்கால் சிவன்வீதியைப் பிறப்பிடமாகவும், வரணி, ஆவரங்கால் சிவன்வீதி ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த ஆறுமுகம் காசித்தம்பி இராமநாதன் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி: 09-02-2025
திருக்குறள்:
“உள்ளத்தால் பொய்யா(து) ஒழிகின் உலகத்தார்
உள்ளத்து(ள்) எல்லாம் உளன்”
வையத்துள் வாழ்வாங்(கு) வாள்பவன் வானுறையும்
தெய்வத்துள் வைக்கப் படும்
தேவாரம்:
“தந்தையார் தாயாருடன் பிறந்தார் தாரமார் புத்திரரார் தாந்தா மாரே
வந்தாறு எங்கனே போமோ(று) ஏதோ மாயமாம் இதற்கேதும் மகிழ வேண்டாம்
சிந்தையீர் உமக்(கு) ஒன்று சொல்லக் கேள்மீன் திகழ்மதியும் வாளரவுந்
திளைக்குமத் சென்னி
எந்தையார் திருநாமம் நமச்சிவாய என்றெழுவார்க்(கு) இருவிசும்பில்
இருக்கலாமே”
திருவாசகம்:
“போற்றியோ நமச்சிவாய புயங்கனே மயங்குகின்றேன்
போற்றியோ நமச்சிவாய புகலிடம் பிறிதொன்றில்லை
போற்றியோ நமச்சிவாய புறமெனப் போக்கல் கண்டாய்
போற்றியோ நமச்சிவாய சயசய போற்றி போற்றி”
திருமந்திரம்:
“கங்காளன் பூசும் கவசத் திருநீற்றை
மங்காமற் பூசி மகிழ்வரே யாமாகில்
தங்கா வினைகளும் சாரும் சிவகதி
சிங்கார மான திருவடி சேர்வரே”
பட்டினத்தார் பாடல்:
“மாடுண்டு கன்றுண்டு மக்கள் உண்டென்று மகிழ்வதெல்லாம்
கேடுண்டு எனும்படி கேட்டு விட்டோம் இனிக் கேள்மனமே
ஓடுண்டு கந்தையுண் டுள்ளேயெழுத் தைந்தும் ஓதவுண்டு”
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!