
திதி:09/06/2023.
ஆறுமுகம் கணேசு
யாழ். கோப்பாயைப் பிறப்பிடமாகவும், தெல்லிப்பழையை வதிவிடமாகவும் கொண்டிருந்த ஆறுமுகம் கணேசு அவர்களின் 10ம் ஆண்டு நினைவஞ்சலி.
கணேசு இராசம்மா
யாழ். தெல்லிப்பழையைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த கணேசு இராசம்மா அவர்களின் 10ம் ஆண்டு நினைவஞ்சலி.
வாழ்ந்த நாட்களை
வசந்தமாக்கி விட்டுச்சென்ற அம்மா அப்பாவே!
உதிர்ந்தது நீங்கள் மட்டுமல்ல
உடைந்தது எங்கள் இதயமும்தான்!
நிழலில் இசைந்தாடி நினைவில் இழைந்தோடி
நெஞ்சில் உயிர் வாழும் தெய்வங்களே!
உங்களை மண் கடல் வான் உளவும் மறவோமே!
அன்புடை நெஞ்சங்கள் சிந்தனை இழந்து
என்புருக ஏங்கிட்டு பார்க்க
எம்மை துயரிலே மூழ்க வைத்து
பன்முகன் காலனோடு நீங்கள் சென்றதேனோ?
சோகத்தின் சுமைதனை
சுமக்கின்றோம் இதயமதில்
பாசத்தின் உறவுகள் நாம்
பரிதவித்து வாடுகின்றோம்
நேசத்தை மறந்து ஏன்
இருவரும் நெடுந்தூரம் சென்றீர்கள்?