10ம் ஆண்டு நினைவஞ்சலி
Tribute
1
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
காரைநகரைப் பிறப்பிடமாகவும், நீர்கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட ஆறுமுகம் கந்தையா அவர்களின் 10ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆண்டு பத்தாகியும்
எங்களால்
ஆறமுடியவில்லை
உங்கள்
பிரிவால் வடியும் கண்ணீரும் காயவில்லை
பாசமழை பொழிந்து
நேசமாய் எமை வளர்த்து
துணிவுடனே
நாம் வாழ வழியதனைக் காட்டிவிட்டு
எமைவிட்டு சென்றதெங்கே?
"காலங்கள் கடந்து போகும்
ஆனால் கண்மணியே அப்பா
உன் நினைவுகள் மட்டும் காலம்தனை
வென்று எம்மிடத்தில் நிற்கும் - எம்
கண்ணிறைந்த கண்ணீரோடு அப்பா...!
இன்றுடன் 10ஆண்டுகள்
ஓடி மறைந்தாலும் உங்கள்
நினைவுகள்
என்றென்றும்
எம்மை விட்டகலாது.
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!
தகவல்:
சிவகெளரி ராஜலிங்கம் குடும்பத்தினர்