யாழ். அச்சுவேலி வளலாயைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட ஆறுமுகம் கணபதிப்பிள்ளை அவர்களின் 25ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி:- 25-02-2024
எமது குடும்ப விருட்சத்தின் ஆணிவேராய்
எல்லோர் மனதிலும் நீங்கா இடம் பிடித்தவராய்
அன்பும் பண்பும் கூடப் பிறந்தவராய்
இல்லை என்று வந்தோர்க்கு இரக்கம் காட்டியவராய்
பசியோடு வந்தவர்க்கு பாசமுடன்
உணவளித்த எம் ஐயா!
நந்தவனம் போன்ற நம் மண்ணில்
நீங்கள் இன்று எங்களோடு இருந்திருந்தால்
அகவை 100ஐத் தாண்டி
அகவை 105ல் எடுத்து வைத்து
குடும்பத்தோடு கொண்டாடி மகிழ்ந்திருப்பாய்
அதை எங்களால் நினைத்து பார்க்க தான் முடிந்தது ஐயா!
மகவுகள் ஒன்பது பேருக்கும் உறுதுணை புரிந்தாய்
கணபதி இரு திரு அடி நினைந்தாய்
மண்ணில் இனிதுற நீ வாழ்ந்து தான் மறைந்தாய்
என் மனதில் சிறந்து எங்களுடன்
வாழ்ந்து வந்த
நினைவுகள் நினைத்து பார்க்கின்றோம்!
சொந்தமுடன் மகிழ்ந்து பிள்ளைகள்
உளம் குளிர
பேரப்பிள்ளைகளையும் காத்து
நல்லறங்கள் பலசெய்து
நல்வழிகள் பலசெய்து
வாழ வைத்த ஐயாவே!
நீங்கள் எம்மை விட்டுப் பிரிந்து
இருபத்தைந்து ஆண்டுகள் ஆகிவிட்டதனை
எம்மால் நம்பமுடியவில்லை!
எங்களை எல்லாம் அன்பாலும்
பண்பாலும் அரவணைத்து வழி
நடத்திய அந்த நாட்கள்
எம்மைவிட்டு நீண்டதூரம்
சென்றாலும் உங்கள்
அறிவுரைகள், அரவணைப்புகள்
என்றும் எங்கள் நெஞ்சங்களில்
உயிர் வாழும் ஐயா!
ஆயிரம் உறவுகள் இருந்தென்ன!
பலகோடி இன்பங்கள் இருந்தென்ன!
உங்கள் அன்பிற்கும் இழப்பிற்கும்
நிகருண்டோ இவ்வுலகில் ஐயா!
அப்பா என்ற சொல்லுக்கு
நீங்களே இலக்கணம்...
நீங்கள் எமக்கு வழிகாட்டியாய்
எங்கள் இதயத்திலேயே வாழ்கிறீர்கள் ஐயா!
கை கூப்பி வணங்கி கடவுளை வேண்டி
கண்கலங்கி நிற்கின்றோம் ஐயா!
ஐயாவின் ஆத்ம சாந்திக்காய்- உங்கள் பாசமுள்ள சின்னமகளின் 25ம் ஆண்டு நினைவுப் பூக்கள்
உங்கள் பாதங்களில் கண்ணீர் பூக்களாய் சமர்ப்பிக்கிறேன்!!!
தொடர்புகளுக்கு
- Contact Request Details