யாழ். வடமராட்சி கொற்றாவத்தையைப் பிறப்பிடமாகவும், கண்டி, கனடா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும், அவுஸ்திரேலியாவை வதிவிடமாகவும் கொண்ட ஆறுமுகம் சின்னக்குட்டி கந்தவனம் அவர்களின் 5ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி: 30-08-2023
அணையாத தீயினில்
அலையான சுவாலையாய்
ஐந்து வருடங்களாகியும்
அனல் கக்கி எரியுதையா
எங்கள் அப்பாவே உங்கள் நினைவுகள்
அன்பின் அடையாளமே அரவணைப்பின் உதாரணமே
பண்பின் திருவுருவே பாசத்தின் இலக்கணமே
நேசத்தின் பிறப்பிடமே
நிறைந்திட்ட குல விளக்கே
நீர்
மறைந்துபோன நாளன்று
உறைந்துதான்
போனோம்
இன்னும் உடைந்துதான் போகின்றோம்
உருக்குலைந்து மாய்கின்றோம்
வருடங்கள் ஐந்து வந்திட்ட போதினிலும்
நம்ப மறுக்கிறதையா எங்கள் மனங்கள்
உம் நல்ல முகம் மறைந்ததென்று
சொல்ல முடியவில்லை எம் சோகத்தை
மெல்ல முடியவில்லை உம் நினைவுகளை
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!