Clicky

1ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 22 MAR 1943
இறப்பு 30 JUN 2022
அமரர் ஆறுமுகம் பாலசுப்பிரமணியம்
வயது 79
அமரர் ஆறுமுகம் பாலசுப்பிரமணியம் 1943 - 2022 அனலைதீவு, Sri Lanka Sri Lanka
Tribute 20 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.

யாழ். அனலைதீவைப் பிறப்பிடமாகவும், கனடா Mississauga Ontario வை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த ஆறுமுகம் பாலசுப்பிரமணியம் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

அன்புள்ளங்கொண்ட மணவாளனே!
நீங்கள் இல்லாமல் நான்
காற்றில் நூலறுந்த
காற்றாடியாய் தவிக்கின்றேன்!!
என்னையும், பிள்ளைகளையும்
தவியாய் தவிக்கவிட்டு
தனியாக நீங்கள் பிரிந்து போனீங்களோ!  

ஆண்டுகள் ஒன்று உருண்டோடி மறைந்தாலும்
அகலாது உம் அன்புமுகம் எம் நெஞ்சை விட்டு
பாசத்தைப் பொழிந்து பண்பினை ஊட்டி
பார் போற்ற எமை வளர்த்தீர்கள்

அப்பா என்ற வலிமையை நீங்கள் இல்லாத
காலங்கள் எமக்கு உணர்த்துகின்றன
இப்போது நாம் வாழும் வாழ்வின்
பெருமைகளுள் உங்கள் வியர்வைத்
துளிகள்தான் ஒளிந்து மெருகூட்டுகின்றன

நாம் மகிழ்ச்சியாக இருக்க நம்மிடம்
ஆயிரம் விடியல்கள் இருந்தாலும்
சோகத்தை பகிர ஒரு நல்ல துணையாக
இறைவன் நமக்களித்த வரமாக நீங்கள் இருந்தீர்கள்!

உங்கள் குரல் எங்கள் காதுகளில்
இப்போதும் கணீரென்று கேட்குதப்பா!
ஆண்டுகள் கடந்தாலும் உங்கள் புன்முறுவல்
பூப்பூத்தவதனமாய் இருந்துகொண்டே இருக்கும்.

உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!

தகவல்: குடும்பத்தினர்

கண்ணீர் அஞ்சலிகள்

Summary

Photos

No Photos

Notices

மரண அறிவித்தல் Sat, 02 Jul, 2022
நன்றி நவிலல் Sat, 30 Jul, 2022