20ம் ஆண்டு நினைவஞ்சலி
Tribute
0
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.
யாழ். கரம்பொன்னைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த ஆறுமுகம் பாலசிங்கம் அவர்களின் 20ம் ஆண்டு நினைவஞ்சலி.
அன்புள்ள அப்பா!!
இருபது ஆண்டுகள் கடந்து சென்றாலும்
ஒவ்வொரு நொடிகளிலும்
இதயத்தின் துடிப்பைப் போல்
அருகிலே நீங்கள் வாழ்வதை
நாம் உணருகின்றோம்
கரைந்து கரைந்து
மணங் கமழும் சந்தனமாய்
உருகி உருகி ஒளி வழங்கும்
மெழுகு வர்த்தியாய்
இன்பமாய் நாம் வாழ
இனியவை பல செய்தீர்
இனியவரே உங்கள் திருவதனம்
எப்படி நாம் மறப்போம்
மறக்கவும் முயல்வோமோ
மறுக்கவும் முயல்வோமோ?
நீங்கள் இல்லாதக் குறைதீர்க்க
பாரினிலே யாருண்டு?
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திகின்றோம்..!
தகவல்:
குடும்பத்தினர்
கண்ணீர் அஞ்சலிகள்
No Tributes Found
Be the first to post a tribute