யாழ். உடுவிலைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Zurich ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த அருமைராசா அருள்சேகர் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
வாழ்நாள் முழுவதும் உங்களை நினைக்கும்
போதேல்லாம் உங்கள் நினைவுத் துளிகள்
விழிகளின் ஓரம் கண்ணீராய் கரைகின்றதப்பா
உடலோடு உயிரை எமக்காக நீ தந்தாய்
அப்பா பெற்று வளர்த்து எம்மை பேரன்பு தன்னுடனே
வற்றாத நதி போல வஞ்சனை இன்றி நாம் வளர
கற்றவராய் நாம் உயரவும் மற்றவரைப் போல
மாநிலத்தில் நாம் மிளிர மனதில் உறுதியுடன்
எமை ஆளாக்கிய தெய்வமே.
“நம் கடமைகள் பல செய்யுமுன்னே
உன் கடமையை முடித்து விட்டாயே
அப்பா என்றால் உன் குரல்
அடுத்த கணம் கேட்டிடுமே
என்றும் கழங்குகின்றோம் அப்பா
பதிலேதும் இல்லையே”
ஏழிரண்டு வயதில் சுமைதாங்கி எம் அப்பா
எண்ணி முடிக்கமுன் எம் மனம் இடிதாங்கி அப்பா
எங்கள் கண்ணில் ஒரு சிறு துளி வரக்கூடாது
என்றீர்கள் இன்று எம் கண்ணில் ஒரு நதியே
ஓடுகின்றது அப்பா
உங்கள் திருமுகம் இன்றும்
எம்மை விட்டு நீங்கவில்லை அப்பா
உங்கள் சுமையை நாம் இறக்க முன்
எதற்கு சென்றீர்கள் அப்பா எம்மை விட்டு
என்றும் உங்கள் நினைவுடன்...
உங்கள் பிரிவால் வாடும் மனைவி(மாலா),
பிள்ளைகள்(லத்திகன், லக்ஷ்சன், லஜின்),
தாய், சகோதரர்கள், மைத்துனர்கள்...
?அன்னாரின் ஆன்மா இறைவனடியில் இளைப்பாறுதல் பெற வேண்டி நிர்க்கின்றோம். இவரின் குடும்பத்தினர் அனைவர்க்கும் எமது துயர் பகிர்வினையும்...