கோண்டாவிலைப் பிறப்பிடமாகவும், சித்தன்கேணியை வசிப்பிடமாகவும், லண்டனை வதிவிடமாகவும் கொண்டிருந்த நடராஜா அருமைதவராஜன் அவர்களின் 10ம் ஆண்டு நினைவஞ்சலி.
விழிமூடி எம்மை வழிகாட்டும் எங்கள் ஒளியான தந்தையே- ஓடி வருவீரோ எம் நல்வாழ்வை காண நேரில் வருவீரோ!
துள்ளித் துள்ளி நாங்கள் போகையில் அள்ளி அணைத்த தங்கமே எம் தந்தையே தள்ளி நின்று எள்ளி நகையாடும் உலகில் துளி கூட துவழாமல் எம்மை தூக்கி விட்ட தந்தையே!
வலியால் நெஞ்சம் தவிக்கையில் ஒளியாய் உம் குரல் கேட்டால் துளியாய் போய்விடும் எம் துயரம்!
அப்பா என்றழைக்க யாருமற்று தவிக்கின்றோம் நீர் மறைந்து பத்து ஆண்டு ஆனாலும் உம் நினைவுகள் எம்மை விட்டு அகலாது!!!