மட்டக்களப்பு குருக்கள்மடத்தை பிறப்பிடமாகவும், கொழும்பு பம்பலப்பிட்டியை வசிப்பிடமாகவும் கொண்ட அருள்நேசம்மா காசிநாதர் அவர்கள் 16-10-2019 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற காசிநாதர்(ஓய்வுபெற்ற அதிபர்) அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்ற ஞானமுத்து, இராசம்மா தம்பதிகளின் மூத்த மகளும், காலஞ்சென்ற சீனித்தம்பி, பெரியபிள்ளை(திருப்பழுகாமம்) தம்பதிகளின் அன்பு மருமகளும்,
Dr. மேகலா ரவிச்சந்திரன்(பிராந்திய மலேரியா தடுப்பு வைத்திய அதிகாரி, மட்டக்களப்பு), Dr. பரந்தாமலிங்கம்(விசேட பல்நிரைப்படுத்தல் வைத்திய நிபுணர், கொழும்பு தெற்கு போதனா வைத்தியசாலை, களுபோவில), ரவிந்திரலிங்கம்(பொறியியலாளர் - உதவி செயற்றிட்டப்பணிப்பாளர் வீதி அபிவிருத்தி அதிகாரசபை, கொழும்பு), நிவேதிகா ரவிச்சந்திரன்(காணிச்சீர்திருத்த ஆணைக்குழு, கச்சேரி, அம்பாறை) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
அன்னம்மா சாந்தலிங்கம், ஞானமுத்து செல்வராசா(ஓய்வுபெற்ற விவசாயப் போதனாசிரியர்), நவமணிதேவி(ஓய்வுபெற்ற கிராம உத்தியோகத்தர்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
ரவிச்சந்திரன்(ஓய்வுபெற்ற அதிபர், தொழில் நுட்பக்கல்லூரி, மட்டக்களப்பு), சுசிகலா பரந்தாமலிங்கம்(முன்னாள் ஆசிரியை, இராமநாதன் இந்து மகளிர்கல்லூரி, கொழும்பு) Dr.மலர்வதனி ரவிந்தரலிங்கம்(காசல்வீதி மகளிர் போதனா வைத்தியசாலை, கொழும்பு), ரவிச்சந்திரன்(சேவைக்கால பயிற்சி ஆலோசகர் தமிழ், கற்குடா கல்வி அலுவலகம், வாழைச்சேனை) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
யதுஷன்(வமட்/புனித மிக்கேல் கல்லூரி), மயூஷன், கவின்(கொழும்பு றோயல் கல்லூரி), நவினன், நவிந்தன், அபிநிதன், அஸ்வினி(வமெதடிஸ்ற் கல்லூரி, கொழும்பு-3) ஆகியோரின் பாசமிகு பாட்டியும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் பொரளை ஜெயரட்ண மலர்ச்சாலையில் 18-10-2019 வெள்ளிக்கிழமை அன்று காலை 10:00 மணி தொடக்கம் இரவு 08:00 மணிவரை அஞ்சலிக்காக வைக்கப்பட்டு பின்னர் இலக்கம் 3, மருதடி வீதி, மட்டக்களப்பில் 19-10-2019 சனிக்கிழமை அன்று அஞ்சலிக்காக வைக்கப்பட்டு பின்னர் 20-10-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று பி.ப 02:00 மணியளவில் ஈமக்கிரியைகள் நடைபெற்று பி.ப 03:30 மணியளவில் மட்டக்களப்பு கள்ளியங்காடு இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.