பிறப்பொன்று உண்டானால் இறப்பொன்று
உண்டு-இது யாவரும் அறிந்தது
ஆயினும் உங்கள் பிரிவு உயிர்நாடியை
உறையவைத்தது
எம்வீட்டு தலைசாய்ந்து நமை தவிப்பில்
விட்டகன்றதேன்
நொடியில் நீங்கள் எங்கேயென்றானதேனோ
ஈழத்திலும் புலத்திலும் எமக்காக உழைத்து
கல்வியெனும் உரம் சேர்த்து
கனிவான பேச்சில் இயல்பான வாழ்வளித்து
அன்பால் அரவணைத்து அளவில்லா நேசம் தந்து
இவ்வுலகில் நல்வாழ்வுக்கு வழிகாட்டி
நம்மை வளர்த்த அப்பா.
ராசா பிள்ளையென நீங்கள் அழைப்பது
மீண்டும் கேட்கவேண்டும் அப்பா!
எங்கள் இதயத்துடிப்பின் சத்தம் அப்பா அப்பா என்கிறது
உடலால் பிரிந்தாலும் எம் உணர்விலும்
உதிரத்திலும் கலந்து வாழும் அப்பா
உங்கள் பேச்சே எங்கள் வாழ்வின் வீச்சு.
அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ்
ஆர்வலர் புன்கணீர் பூசல் தரும்
அன்பை அடக்கிட தாழில்லை அது தகுந்த
நேரத்தில் மற்றவர் வேதனை கண்டு விழிநீராய்
எல்லோர்முன் வெளிப்படும்!
இறைநிழலில் சமாதானத்தோடு இளைப்பாற மன்றாடுகிறோம்.
உங்கள் பாசமுள்ள பிள்ளைகள்.
யாழ். இளவாலை போயிட்டியைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Aldenhoven ஐ வசிப்பிடமாகவும் கொண்ட அருளப்பு திருச்செல்வம் அவர்கள் 18-05-2026 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான அருளப்பு, ஞானமுத்து தம்பதிகளின் ஏக புத்திரனும், காலஞ்சென்ற தேவசகாயம், எலிசபேத் அம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
அன்ரனற் ரஞ்சனி அவர்களின் பாசமிகு கணவரும்,
காலஞ் சென்றவர்களான அன்னபாக்கியம், பிலோமினா, தவமணி, நவமணி ஆகியோரின் பாசமிகு அருமைச் சகோதரனும்,
காலஞ்சென்றவர்களான சவரிமுத்து, கீத பொன்கலன், ஞானசீலன் மற்றும் அலெக்சாண்டர், ஜீவம், மரியதாஸ், சரோசா, பாலா, மற்றில்டா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
வளன்(ஜேர்மனி), திருமகள் (கனடா) ரஞ்சிலா (கனடா), வேணி (ஜேர்மனி) வேந்தன் (ஜேர்மனி) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
பிரபா (கனடா), தயா(கனடா), எடித்(ஜேர்மனி), சுதன்(ஜேர்மனி), கீர்த்தனா(ஜேர்மனி) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காவியா, வேணுகா, இதயா, ஓவியா, தரணியா, இனியன், அருள், தரண், விஷான், தியாரா ஆகியோரின் ஆசைப் பேரனும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details