யாழ். உரும்பிராயைப் பிறப்பிடமாகவும், பண்டத்தரிப்பு, கனடா Toronto ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட அருளப்பு நவரட்ணம் அவர்கள் 26-03-2020 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான அருளப்பு பூரணம் தம்பதிகளின் சிரேஷ்ட புத்திரரும், காலஞ்சென்றவர்களான ஆசீர்வாதம் பிரான்சிஸ்கா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
Christine நவரட்ணம்(செல்லக்கிளி) அவர்களின் அன்புக் கணவரும்,
லோறன்சியா(செல்வா), சிக்பிறிட்(வரதன்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
கொட்வின், சோபியா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
கிளாடியா, கிளட்வின், ஜெனிவி, ஏடென், அன்றியா ஆகியோரின் பாசமிகு பேரனும்,
காலஞ்சென்ற குணரட்ணம், யோகரத்தினம்(தங்கம்), ஜீவரத்தினம்(தவம்), ராசரட்ணம், புஷ்பரத்தினம், ஜெயரட்ணம்(ராசன்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்ற ஜேசுதாசன், அருளம்மா, காலஞ்சென்ற பிலோமினா(செல்வம்), இராசநாயகம், புஷ்பாராணி வேலாயுதம், அல்போன்ஸ், சந்திரா, அரியநாயகம், மறினாசாந்தி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
றூபி, காலஞ்சென்ற ஜெயரட்ணம், பிலோமினா ஆகியோரின் அன்புச் சகலனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
He had the most the gentle and calm spirit. Always felt a sense of peace when he was around. His interactions with his family was something to be admired; quick to listen and slow to anger. He will...