வவுனியா பெரிய குமரசன் குளத்தைப் பிறப்பிடமாகவும், லண்டன் Bromley ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த அருளப்பு ஜெனற் நியூஜன் அவர்களின் 5ம் ஆண்டு நினைவஞ்சலி.
அன்பு மகன் சந்துருவே!ஆறுதில்லை
எம் மனமே!!!
வருடங்கள் ஐந்து உருண்டு ஓடினாலும்
என்றும் எம் கண்முன்னே நிற்கிறது உன் பூமுகம்
உன்னை இன்நிலைக்கு ஆளாக்கியது
வஞ்சகர்கள் செய்த சதியோ?
இல்லை இறைவனின் விதியோ?
வாகன வடிவில் காலனவன் வந்து
உன்னை எங்களிடமிருந்து பறித்தானோடா?
அப்பா, அம்மா, சகோதரர் என்று
பட்டாம் பூச்சிபோல் சுற்றி திரிந்த நீ
எங்களை தவிக்க விட்டு எங்கே ஐயா போனாயடா?
இளமையில் உயிர் பிரிந்தாய்
இதயத்தில் உறைந்து நின்றாய்
நீ இல்லா இவ்வுலகு எமக்கு வெற்றிடமே!
எங்கும் நீ நிறைந்தாய்
எதிலும் நீயே நிறைந்தாய்
எங்களில் கண்களில் - நீர் நிறைத்து
நிஜத்தில் ஏன் மறைந்தாய்?
உன் பிரிவால் துயருறும்
அம்மா, அப்பா, அண்ணா, அண்ணி
தம்பி மற்றும் உறவினர், நண்பர்கள்.