யாழ். தையிட்டியைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டன் Walthamstow வை வசிப்பிடமாகவும் கொண்ட அருளானந்தன் செல்லையா அவர்களின் 31ம் நாள் அந்தியேட்டி அழைப்பும் நன்றி நவிலலும்.
வையகத்தில் வாழ்வாங்கு வாழ்ந்து
எங்களை வானுயர பெயர் விளங்க
வைத்த எங்கள் அன்புத் தெய்வமே
அப்பா நீங்கள் இறைவனடி சேர்ந்து
31 நாட்கள் கடந்து விட்டாலும்
நீங்கள் எப்பொழுதும்
எம்முன் நிற்கின்றீர்கள்!
உறவுகளைத் தவிக்கவிட்டு
இமைகளை மூடிவிட்டாய்!
எமையெல்லாம் அழவிட்டு
இறைவனை நாடிவிட்டாய்!
உங்கள் நினைவு எழும்
பொழுதெல்லாம் எங்கள்
உள்ளம் ஏக்கத்தில் தவிக்கின்றது
கண்கள் உங்களை தேடுகின்றன!
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!
அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்று வரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.
அன்னாரின் 31ம் நாள் நினைவஞ்சலியும் ஆத்ம சாந்தி 08-03-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று பி.ப 01:30 மணிமுதல் பி.ப 04:30 மணிவரை நடைபெறவுள்ளது. அத்தருணம் தாங்கள் தங்கள் குடும்ப சகிதம் வருகை தந்து கலந்துகொள்வதோடு தொடர்ந்து நடைபெறும் மதிய போசன நிகழ்விலும் இணைந்துகொள்ளுமாறு மிகவும் பணிவன்புடன் அழைக்கின்றோம்.
இடம்:
South Chingford Congregational Church
161 Chingford Mount Road,
London,
E4 8LT
We are so sorry to hear the of loss of your brother, such sad news. Please do let us know if we can help during this difficult time. Love Nayna & family